ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஷாருக்கான் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பதான் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ள ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து டுன்ங்கி படத்தில் நடிக்க இருக்கிறார்.
இனி படங்கள் தோல்வி அடையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஷாருக்கான் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் கதை மட்டும் கேட்டு வருகிறார். அவற்றை மிகவும் கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில்தான் ஏற்கெனவே வெற்றி பெற்ற டான் படத்தின் 3ம் பாக கதையும் அவரிடம் கொடுக்கப்பட்டது. இதை படித்து பார்த்த ஷாருக்கான் கதையில் தனக்கு திருப்தி இல்லை என்று அதை நிராகரித்து விட்டார். இன்னும் வலுவான கதையோடு வாருங்கள் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் டான் 3 படத்தில் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை டான் படத்தின் இயக்குனர் பர்ஹான் அக்தரே வெளியிட்டுள்ளார். டான் முதல் பாகம் 2006ம் ஆண்டிலும் இரண்டாம் பாகம் 2011ம் ஆண்டும் வெளியானது. இரண்டு பாகத்திலும் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்திருந்தார்.