மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை புஷ்கர் - காயத்ரி இயக்கி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள். அபுதாபி, லக்னோ, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இந்நிலையில், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உத்தரப்பிரதேசத்தில் விக்ரம் வேதா படப்பிடிப்பை நடத்தக் கூடாது எனக் கூறி நிராகரித்ததாகவும், துபாயில் படப்பிடிப்பை நடத்துமாறு கோரியதாகவும் இதனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகக் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு தளங்கள் தொடர்பான தவறான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன. விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு லக்னோ உள்பட இந்தியாவைச் சுற்றியே பரவலாக நடக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி விடுகின்றோம்.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை படத்தின் ஒருபகுதி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. ஏனெனில் அங்கு மட்டும்தான் 'பயோ பபுள்' எனப்படும் மிக அதிக ஆட்களை வைத்து பணி செய்யும் சூழலும், உள்ளுக்குள்ளேயே படப்பிடிப்புக்கு ஏற்ப ஸ்டுடியோவில் செட் கட்டிக்கொள்வது போன்ற வசதிகளும் இருந்தன. இந்த உண்மையை திசை திருப்ப பரப்பப்படும் அனைத்து செய்திகளுமே பொய்யானது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.