நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். கங்கனா ரணவத் போன்று பரபரப்பான கருத்துகளை வெளியிடுகிறவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு "தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது"என்று தெரிவித்திருந்தார் . இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதேபோல போதை வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவரும் இவர்தான். ஆர்யன்கான் நிரபராதி அவருக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்வரா பாஸ்கர் திடீரென மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.