லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். தற்போது பாலிவுட்டிலும் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் 'மிஷன் மஜ்னு' படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து இரண்டாவதாக அமிதாப் பச்சன் நடிக்கும் 'குட்பை' படத்தில் நடித்துள்ளார். தற்போது குட் பை படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அதை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருக்கும் அனிமல் படத்திலும் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இதுதவிர தமிழில் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் விஜய் உடன் இணைந்து இவர் நடித்து வருகிறார்.