அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சாகச விரும்பி, எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தன்னுடைய தொலைக்காட்சி தொடரான "மேன் வெர்சஸ் வைல்ட்" மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி மிக சிறிய வயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட பிரிட்டிஷ் நபர்களில் இவர் ஒருவராவார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு காடுகள், பாலைவனங்கள் போன்றவற்றில் இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் தான் மட்டுமல்லாமல் பிரபலங்களுடன் காட்டுக்கு பயணம் செய்வது என்பதும் நடைபெறுகிறது. அந்த வகையில், பியர் கிரில்ஸ், பிரதமர் மோடி,நடிகர் ரஜினிகாந்த் போன்ற இந்திய பிரபலங்கள் உடன் காட்டுப் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் அவர் தற்போது ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் உடன் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சாகச நிகழ்ச்சி தனியார் ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 8 ஆம் தேதி ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .