அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே மலையாள படத்தில் நடித்து வரும் அவர் தமிழில் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் அவர் விஷ்ணு மஞ்சுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் பாயல் ராஜ்புத்தும் நடிக்கிறார்.
இது விஷ்ணு மஞ்சுவின் 19வது படம். ஏவிஏ எண்டர்டெயின்மெண்ட் என்று பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள விஷ்ணு மஞ்சு இந்த படத்தை முதல் படமாக தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் ஜின்னா என்று அறிவித்துள்ள விஷ்ணு மஞ்சு இதனை பான் இந்தியா படம் என்றும் அறிவித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியில் படம் வெளிவருவதாக அறிவித்துள்ளார்.
இதுதவிர தனது தயாரிப்பு நிறுவனத்தில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆடியோ வியாபாரத்திலும் ஈடுபட இருப்பதாகவும், ரிக்கார்டிங் ஸ்டூடியோ கட்டி இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.