தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
பிரபல பின்னணி பாடகர் கேகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் திரையுல பிரபலங்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் 22 வயதே ஆன இளம் பாலிவுட் பாடகர் ஷீல் சாகர் திடீரென மரணம் அடைந்தார். கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்திருக்கிறார். ஆனால் அதுபற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது. தற்போது அவரது நண்பர்களின் இரங்கல் செய்தி மூலமே இந்த தகவல் வெளிவந்துள்ளது.
ஷீல் சாகர் இந்தி மற்றும் மராட்டிய திரைப்படங்களில் பாடி உள்ளார். ஏராளமான இசை ஆல்பங்களும் வெளியிட்டிருக்கிறார். தற்போது பாலிவுட் பிரபலங்கள் ஷீல் சாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர், கேகே, ஷீல் சாகர் என திரையுலகம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது.