பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
பாகுபலிக்கு நிகரான பிரமாண்டத்துடன் ஹிந்தியில் உருவாகி வரும் படம் பிரம்மாஸ்திரா. இரண்டு பாகமாக வெளிவர இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை 4 பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர்,ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி போன்ற இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரக் கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது.
தென்னிந்தியாவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிடுகிறார். அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்திற்கு பிர்தம் இசை அமைக்கிறார், பங்கஜ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புராணம் கலந்த பேண்டசி படமாக உருவாகிறது.