ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே பிரென்சு ரிவேரியா திரைப்பட விழாவும் நடந்திருக்கிறது. இந்த விழாவில் சிறந்த சினிமா பங்களிப்புக்காக நவாசுதீன் சித்திக்கிற்கு பிரெஞ்சு ரிவேரியா விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதனை இரண்டு முறை எம்மி விருது வென்ற அமெரிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் வின்சென்ட் டி பால் வழங்கினார்.
துருக்கிய நடிகரான கேன்சல் எல்சின், பாலிவுட் நடிகை கில்லஸ் மரினி, சர்வதேச புகழ்பெற்ற எடிட்டர் நைஜெல் டேலி, போலந்து இயக்குனர் ஜரோஸ்லா மார்ஸ்ஸெவ்ஸ்கி உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நவாசுதீன் சித்திக், இந்தியாவிலேயே அதிக சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"ரிவேரியா விருது பெற்ற அந்த மாலை பொழுதும், உலகின் சிறந்த கலைஞர்களுடன் செலவிட்ட அந்த தருணங்களும் மிகவும் அற்புதமானவை" என்கிறார் நவாசுதீன்.