கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் |
சிட்டாடல் என்ற வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதனை பிரியங்கா சோப்ரா நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். 4 ஆங்கில இயக்குனர்கள் இயக்குகிறார்கள். இதில் ரிச்சர்ட் மேடன், ஜோன்ஸ், ஸ்டேன்லி டச் உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள் நடிக்கிறார்கள். இது ஒரு சயின்ஸ் பிக்சன் ஸ்பை த்ரில்லர் கதை.
இந்நிலையில் முகத்தில் அடிபட்டு காயம் அடைந்தது மாதிரியான ஒரு படத்தை வெளியிட்டு, "வேலை கடினமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பின் போது நிஜமாகவே காயம் அடைந்தாரா பிரியங்கா அல்லது மேக்-அப்பா என்பதை அவர் கூறவில்லை.