ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமா வாழ்க்கையே திசை மாறிப்போனது. இந்த நிலையில் கடுமையான வாழ்க்கை சூழலில் இருந்து மீண்டு நடிப்பில் பிசியாகி இருக்கிறார். ஆம்... முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாகப் போகிறார் ஷில்பா ஷெட்டி.
‛இண்டியன் போலீஸ் போர்ஸ்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் சித்தார்த் மல்கோத்ராவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்திய காவல்துறை சிக்கலான பல வழக்குகளை எப்படி கையாண்டது என்பது குறித்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இதில் இந்தியா முழுக்க நடந்த பல குற்றச் சம்பவங்களும், அதில் போலீசின் செயல்பாடுகளும் இடம்பெறுகிறது.