ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல ஹிந்தி தொலைக்காட்சி தொடர் நடிகை சாவி மித்தல். பத்மினி, நாகின், ஏ சடுக்கி அஸ்மான், டுவிங்கிள் பியூட்டி பார்லர், கிருஷ்ரீணதாசி என்கிற துளசி உள்பட ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சாவி மித்தல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்புள்ள மார்பகமே, இது உனக்கான பாராட்டு பதிவு. முதல்முறை உன்னை பார்த்தபோது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. என் குழந்தைகளுக்கு நீ பால் கொடுக்கும்போது உனது முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஆனால், இன்று நான் மார்பக புற்றுநோயுடன் போராடுகிறேன்.
புற்றுநோயுடன் போராடுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக என் மனதை சோர்வடைய செய்ய மாட்டேன். எளிதாகவும் இருக்கக்கூடாது, கடினமாகவும் இருக்கக்கூடாது. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு என் வாழ்த்துகள். உங்களிடம் இருந்து நான் உத்வேகம் பெறுகிறேன். ஆனால், அது உங்களுக்கு தெரியாது. இக்கட்டான இந்த நேரத்தில் நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி. என்று எழுதியுள்ளார்.