ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே திருமண பந்தத்தில் இணையப்போகும் நட்சத்திரங்களாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடிதான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வந்தார்கள். இருவருமே திரையுலகின் மிகப்பெரிய குடும்பத்து வாரிசுகள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது..
இந்த நிலையில் ஆலியா பட்டின் கார் டிரைவர் சுனில் தலேகர் மணமக்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அதில், “உங்களுடைய சிறிய கைகளை பிடித்துக்கொண்டதிலிருந்து உங்களை இப்படி மணப்பெண் கோலத்தில் பார்த்துக் கொண்டிருப்பது வரை என்னுடைய இதயம் இன்று சந்தோசத்தால் மட்டுமே நிரம்பி வழிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆலியா பட்டுக்கு ஐந்து வயதாகும்போது அவர்கள் குடும்பத்தில் டிரைவராக பணியில் சேர்ந்த சுனில் தலேகர், ஆலியா பட் முதன்முறையாக பள்ளி சென்ற போதும் சரி, வளர்ந்து பெரிய பெண்ணாகி முதன்முறையாக படப்பிடிப்புக்கு சென்ற போதும் சரி, அவர்தான் ஆலியாவுக்காக கார் ஓட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது