ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்த 'கங்குபாய் கத்தியவாடி' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து ஆலியா நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது.
பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்டில் அறிமுகமாவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரது வரிசையில் தற்போது ஆலியாவும் இடம் பிடித்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் புதிதாகத் தயாரிக்க உள்ள படத்தில் ஆலியா பட் நடிக்க உள்ளார். கால் கடோட், ஜேமி டோர்னன் ஆகியோரும் அப்படத்தில் நடிக்க உள்ளதாக நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாம் ஹார்ப்பர் இயக்க உள்ள இப்படத்திற்கு 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' எனத் தலைப்பு வைத்துள்ளார்கள்.
ஹாலிவுட் செல்லும் ஆலியாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.