மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா |
பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர். ராக், மில்கா சிங், லக்ஷயா, டான் 2, டோபான், கேஜிஎப் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். தற்போது மிஸ்டர் மார்வெல் என்கிற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
2000மாவது ஆண்டில் பர்கான் அக்தர், அதுனா பாபனி என்பவரை திருமணம் செய்தார். 17 வருட வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பாலிவுட் நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கரை காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். வருகிற 21ம் தேதி இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.