மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
புதுடில்லி : பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் இந்நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் விளக்க அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 முறை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனால் இன்று அவர் ஆஜர் ஆவாரா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களின் பெயர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.