சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கொரோனாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் நடிகர், நடிகைகள் விழாக்கள், விருந்துகள், படப்பிடிப்புகள் என எப்போதும் ஒரு கூட்டத்துடனேயே இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை கொரோனா தொற்று எளிதாக தாக்குகிறது. இதற்காக அவர்களுக்கு கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கிறது. இதையும் சிலர் மீறிவிடுகிறார்கள்.
அலியா பட் நடித்து வரும் இந்தி படம் பிரம்மாஸ்த்ரா. டில்லியில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் ஆலியாபட் மும்பையில் இருந்து சென்று கலந்து கொண்டார். சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டும் பங்கேற்றிருந்தார். இதில் கலந்த கொண்ட நடிகை கரீனா உள்ளிட்ட ஒரு சிலருக்கு நோய் தொற்று உறுதியானதையடுத்து நடிகை ஆலியா பட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தனிமைப்படுத்துதல் விதியை மீறி அவர் மும்பையிலிருந்து டில்லி சென்றதாகவும், அவர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதை மறுத்துள்ள மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆலியா பட் தனிமைப்படுத்தப்படவில்லை, அவர் கொரோனா விதியை மீறவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விமானத்தில் செல்வதற்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.