ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பல வருடங்களுக்கு முன் வெற்றி பெற்ற படத்தை தற்காலத்துக்கு ஏற்ற மாதிரி ரீமேக் செய்வது அவ்வபோது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதன் ரீமேக்கை வேறு ஒரு இயக்குனர் தான் இயக்கியிருப்பார்.. ஆனால் 1995ல் இந்தியில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே' படத்தை அதன் இயக்குனர் ஆதித்யா சோப்ராவே மீண்டும் ரீமேக் செய்து இயக்கவுள்ளாராம்.
ஷாரூக்கான், கஜோல் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமானார். வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 102.50 கோடி ரூபாயை வசூலித்தது. மேலும் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்தநிலையில் 26 வருடங்கள் கழித்து இந்தப்படத்தை தானே ரீமேக் செய்யப்போவதாக கூறியுள்ளார் ஆதித்ய சோப்ரா. இதுபற்றி கடந்த சில வருடங்களாகவே கூறி வந்த ஆதித்ய சோப்ரா, இந்தப்படத்தை முற்றிலும் புதிய குழுவினரை கொண்டு உருவாக்க இருக்கிறாராம்.