பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கொரோனா தொற்று முதன் முதலாக பரவிய போது ஓடிடி தளங்கள் திடீரென விஸ்வரூபமெடுத்து வளர்ந்தன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் பொழுதுபோக்கிற்காக மக்கள் ஓடிடி தளங்களை அதிகமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்ட சில ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆனால், அதற்கு முன்பாக 2019ம் ஆண்டின் இறுதியில் நீண்ட காலம் கிடப்பில் கிடந்த 'ஆர்கே நகர்' படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உடனடியாக தளத்திலிருந்து நீக்கப்பட்டு பின் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் வெளியானது. ஆக, ஓடிடியின் முதல் நேரடி வெளியீட்டுப் படமே சர்ச்சை வெளியீட்டாகத்தான் நடந்தது.
20-21ல் படையெடுத்த ஓடிடி வெளியீடுகள்
அதற்கடுத்து ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படம் திரையுலகினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் ஓடிடியில் நேரடியாக வெளிவந்தது. தொடர்ந்து பல படங்கள் வெளிவந்தன. அவற்றில், “கபெ ரணசிங்கம், சைலன்ஸ், சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன், மாறா, பூமி, டெடி, மண்டேலா, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, நெற்றிக்கண், டிக்கிலோனா, அனபெல் சேதுபதி, லிப்ட், விநோதய சித்தம், உடன்பிறப்பே, ஓ மணப்பெண்ணே, ஜெய் பீம், எம்ஜிஆர் மகன், அன்பறிவு, முதல் நீ முடிவும் நீ, மகான், மாறன், சாணி காயிதம், ஓ 2,” ஆகியவை முக்கியமான படங்கள்.
அவற்றில் சில படங்கள் பெரிய வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய படங்களும் உள்ளன. விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, ஆர்யா, மாதவன், தனுஷ், சசிகுமார், ஆதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின.
ஓடிடியில் நேரடி வெளியீடு என்றால் ரசிகர்களும் ஆர்வமுடன் பார்த்த நாட்களும் இருந்தது. சில படங்கள் டிவிக்களிலும், சில படங்கள் இணையதளங்களிலும் கூட நேரடியாக வெளியாகின.
2023ல் ஒற்றை இலக்கத்தில் ஓடிடி வெளியீடு
2020ம் ஆண்டில் 24 படங்கள், 2021ம் ஆண்டில் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து 46 படங்களும், கடந்த வருடம் 2022ம் ஆண்டு எண்ணிக்கை குறைந்து 26 படங்களும் மட்டுமே வெளியாகின. ஆனால், இந்த வருடம் அந்த எண்ணிக்கை அதிரடியாகக் குறைந்தது. முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்று கூட ஓடிடி தளங்களில் வெளியாகவில்லை.
ஓடிடியில் படங்கள் நேரடியாக வெளியாவதை எந்த முன்னணி நடிகரும் விரும்பவில்லை என்பதையே அது உணர்த்துகிறது. ஓடிடியில் வெளியாவது தங்களது பிரபலத்தை குறைப்பதாக அவர்கள் நினைப்பதே அதற்குக் காரணம் என்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ அது தியேட்டர் வெளியீடாகவே இருக்கட்டும் என்பதால்தான் இந்த வருட நேரடி ஓடிடி வெளியீடு என்பது ஒற்றை இலக்கங்களோடு நின்று போய்விட்டது.
நான்கு வாரங்களில் புதிய படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என்பதால் ஓடிடி நிறுவனங்களும் நேரடி வெளியீட்டிற்காக அதிகக் கோடிகளைக் கொட்டிக் கொடுக்க முன்வரவில்லை என்று சொல்கிறார்கள்.
இந்த ஆண்டில் ஓடிடியில் நேரடியாக வெளியான படங்களாக, “புர்கா, மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், பூ, மாலை நேர மல்லிப்பூ, வான் மூன்று, மால், கூழாங்கல்” ஆகிய படங்களும், 'கன்னித் தீவு' படம் நேரடியாக டிவியிலும் வெளியானது. அடுத்த வருடம் இவை கூட வருமா என்பது சந்தேகம்தான்.
இருப்பினும் ஆர்யா, ஜெய் ஆகியோர் தமிழ் வெப் சீரிஸ்களிலும், விஜய் சேதுபதி ஹிந்தி வெப் சீரிஸிலும் இந்த ஆண்டில் நடித்துள்ளார்கள்.