மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பி.எஸ்சி., படித்த 24 வயதான இளம் நாயகி ப்ரீத்தாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து இவரது ஸ்டோரிஸ், போஸ்ட், ரீல்ஸ் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்... இளசுகளிடம் இவரது மவுசை!
ப்ரீத்தா கூறியதாவது: சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அப்பா, அம்மாவிற்கு நான் ஒரே பொண்ணு. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எட்டாக்கனியாக இருந்தது. என் குரலை என்னுடன் இருப்பவர்கள் கேலி செய்வார்கள்; எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பேன். ஒரு கட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லுாரிக்கு சென்றபோது என்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன். என்னிடம் இருந்த தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளினேன். படிப்படியாக என் திறமையை வளர்த்துக்கொண்டேன்.
சினிமாவில் ஹீரோயினாக ஆசை இருந்தது. ஒரு யுடியூப் சேனலிலிருந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் ஆர்வமாக நடித்தேன். ஆனால் படம் வெளியே வந்தபிறகு நான் நடித்த காட்சிகள் இடம் பெறவில்லை.
அடுத்து குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை நழுவ விடாமல் 120க்கு மேலான குறும்படங்களில் நடித்தேன். நடிப்பு பழக நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து அப்படியே வெப்சீரிஸ் பக்கம் வந்தேன். கண்மணி அன்போடு காதலன், கதைப்போமா, ஆயிரம் ஜன்னல் வீடு போன்ற வெப்சீரிஸ்களில் நடித்தேன். அதில் கதைப்போமா வெப்சீரிஸ் மூலம் என் முகமும் ரசிகர்கள் மத்தியில் பதிய துவங்கியது.
நெகட்டிவ் எனக்கருதிய என் குரல் பாசிட்டிவாக மாற ஆரம்பித்தது. பெற்றோர் ஒத்துழைப்பில் திறமையை காட்ட ஆரம்பித்தேன். என் ஆசை சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெயர் வாங்க வேண்டும் என்பது தான். அதுவும் நடக்க போகிறது.
தற்போது 3 படங்களில் 'கமிட் ஆகி' உள்ளேன். ஒரு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரோடு நடித்திருக்கிறேன். சீரியல்களிலும் வாய்ப்புகள் வருகிறது. இருந்தபோதிலும் திரைப்படங்களில் நடிப்பதை தான் விரும்புகிறேன். அதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறேன். எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக, நேர்த்தியாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை தாரக மந்திரமாக வைத்திருக்கிறேன் என்றார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்திருப்பவர் சென்னையை சேர்ந்த ப்ரீத்தா. 'திரைப்பட ஹீரோயின் ஆக ஆசைப்பட்டேன். குறும்பட நடிகையாக சாதித்து இன்று திரைத்துறையில் நுழைந்திருக்கிறேன். இங்கும் வெல்வேன்' என்கிறார் ப்ரீத்தா.