மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட சித்தார்த், நடிப்பின் நுணுக்கங்களை சென்னையில் கூத்துப் பட்டறையில் கற்றுக்கொண்டவர். நடிகர் அருண்பாண்டியன் தயாரித்த படங்களுக்கு அசோசியேட்டாக பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தில், தோன்றும் கனவை மனதில் கருவாக்கி வெள்ளித்திரையில் தன்னை தயார்படுத்த தொடங்கி அதில் வெற்றி கண்ட அவரை சந்தித்தபோது முதல் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
‛‛கொரோனா காலத்தில் ஒரு கதையை உருவாக்கி இயக்குநர் சுனில் தேவிடம் ஆலோசித்தேன். பலநாட்கள் விவாதம் நடந்தது. குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களை துாக்கி உயர்த்திவிடும் ஓ.டி.டி தளத்தை நம்பியே உருவாக்கப்பட்டது 'அதோ முகம்' என்ற என் முதல்படம்.
திரைத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பு பிரிவில் வேலை செய்த அனுபவத்தில் இந்த சிறிய பட்ஜெட் படத்திற்கு முயற்சி செய்தேன். ஆனால் நடிப்பு எவ்வளவு கடினம் என்பதையும் என்னால் உணர முடிந்தது. கணவன், மனைவி மீது அன்பை வெளிப்படுத்த செய்யும் முயற்சியில் நடக்கும் விபரீதங்களே படத்தைக் கொண்டு செல்லும். பலரும் படத்தை அருமையாக அனுபவம் உள்ளவர்களால் எடுக்கப்பட்டது போல் இருக்கிறது என பாராட்டினர்.
அனைவரும் புதுமுகங்கள், ஒரு சில படங்களில் நடித்த துணை நடிகர்களை வைத்து படத்தை முடித்தோம். எங்களை ஊக்கப்படுத்த அருண்பாண்டியன் ஒரு சில காட்சியில் வருவார். சஸ்பென்ஸ், திரில்லிங் இதை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டது. நண்பர்கள் சிலர் பணம் கொடுத்து உதவினர்.
இன்றைய காலத்தில் ஒரு படத்தை இரண்டரை கோடி பட்ஜெட்டில் எடுத்து தியேட்டரில் திரையிடுவது இயலாத காரியம். மலையாளத்தில் வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இதில் கற்றுக்கொண்ட பாடம், படத்தை வெளியிடும் போது போட்டியாக வெளிவரும் படங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.
எங்கள் படத்தின் மலையாள மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. எனது நடிப்பில் அடுத்த படமும் ஒப்பந்தமாகியுள்ளது மகிழ்ச்சி தருகிறது,'' என்றார்.