மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் இளமையான, இன்னசென்ட்டான அம்மா கேரக்டர் என்றதுமே நிச்சயம் ஜானகி சபேஷின் முகம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். தமிழ், தெலுங்குனு, 30க்கும் மேற்பட்ட படங்களில், அப்பாவி அம்மாவாக வலம் வந்த இவருக்கு, கதைசொல்லி என்ற முகமும் உண்டு.
'தி ஜங்கிள் ஸ்டோரிடெல்லிங் பெஸ்டிவல்', பாட்டியின் ரசம்' என்ற இரு கதைப்புத்தகங்கள் மூலம், சிறார் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சமீபத்தில், திருப்பூர் வந்த அவரிடம் பேசியதிலிருந்து...
சினிமா என்ட்ரீ எப்போது?
ராஜிவ் மேனனின் விளம்பரம் தான் முதல் என்ட்ரீ. மின்சார கனவு பட வாய்ப்பு கிடைச்சது. அதன்மூலம், 'ஜீன்ஸ்' பட வாய்ப்பு. அனேகமாக அந்த படத்துல இருந்துதான் தமிழ் சினிமாவுல இளமையான, காமெடியான அம்மா கேரக்டர்கள் ஆரம்பிச்சதுன்னு சொல்லலாம்.
கதைசொல்லி குறித்து...
ஒருமுறை, பெங்களூருவை சேர்ந்த 'கதாலாயா' நிறுவனர் கீதா ராமானுஜத்தின், 'ஸ்டோரி டெல்லிங் ஒர்க்ஷாப்'ல கலந்துகிட்டேன். அதுதான் என்னோட திருப்புமுனை. கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை என முக்கிய நகரங்களில் வசிக்கிறேன். இந்த நகரங்கள் எனக்கு பல முக்கியமான கதைகளை கத்துக்கொடுத்திருக்கு. இந்த அனுபவங்களை கதைகளாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
எழுத்தார்வம் எப்படி வந்தது?
ஒருமுறை நெருப்புக்கோழி பற்றி கதை சொல்லுங்களேன்னு ஒரு சிறுவன் கேட்டான். கூகுளில் கூட இல்லை. நானே உருவாக்கியதுதான், 'தி ஜங்கிள் ஸ்டோரி டெல்லிங் பெஸ்டிவல்' புத்தகம். தமிழ் உட்பட ஒன்பது மொழிகள்ல மொழிபெயர்த்து வெளியிட்டிருக்காங்க துளிகா பதிப்பகம். பாட்டியின் ரசம்' ஒரு இளம் பெண் தன் பாட்டியின் மறைவால் காணாமல் போன ஒரு வகை ரசத்தின் செய்முறையை தேடுவதை சுற்றியே கதை சுழல்கிறது.
உங்களுக்கான அடையாளம்?
கில்லி அம்மா' பாருனு சொல்வதைவிட, குழந்தைகள் என் கதைகள் மூலமா என்னை அடையாளம் காண்பது ரொம்ப பிடிச்சிருக்கு. ஜனங்களோடும், குழந்தைகள் சமூகத்தோடும் யாதார்த்த பழக முடிகிறது. அவர்களின் அன்புக்கு இணையேயில்லை. வாய்ப்பு வந்தால் நடிப்பையும் தொடர்வேன்.
எதுவாக இருந்தாலும் 'ரவுண்டு' கட்டி அடிக்கிறீங்களே?
பேமிலி சப்போர்ட் முக்கியம். என் கதைகளில் வர்றபாட்டுக்கு, என் கணவரும், மகளும்தான், 'ட்யூன்' போட்டாங்க. மாமியாருக்கு, 94 வயது. அவங்க அனுபவங்களையும் கேட்டு கதை எழுதுவேன். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கும் வொர்ஷாப்னு ஓடிட்டே இருக்கேன், அவங்க என்கரேஜ்மென்ட் முக்கிய காரணம்.
உங்களின் கனவுநிறைவேறியதா?
வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்புகளை முழு மனதோடு செய்கிறேன். ரிசல்ட்டை நினைப்பதில்லை. ஆனாலும், பாட்டியின் ரசம்' புத்தகம், நீட் புக் லிட்ரேச்சுரல் புக்' விருது, பி.கே., கனோரியா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கதைசொல்லிக்காக, முதல்முறையாக சேலம் பாவை குரூப் இன்ஸ்டிடியூசன், சிறார் கதை சிற்பி' விருது வாங்கியது பெருமிதமாக உள்ளது.
2K கிட்ஸ் அம்மாவுக்கு அட்வைஸ்?
காலம் மாறிட்டே இருக்கும். டீன் ஏஜ்ல நான் என் பொண்ணுகிட்ட சொன்னது, நீ எங்கிட்டக் கத்துக்க; நான் உங்கிட்ட இருந்து கத்துக்கறேன்'. இது எனக்கு கரெக்டா ஒர்க் அவுட் ஆச்சு.