ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இளம் புயலாக பாட்டு, இசை, நடிப்பு என தமிழ் திரையுலகை கலக்கினாலும் அடுத்தடுத்து ஆல்பம் பாடல்களில் நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பன்முக நாயகன் முகேன் மனம் திறக்கிறார்...
புதிதாக ரிலீஸ் ஆகும் 'ஒத்த தாமரை' ஆல்பம்
ஆல்பம் இயக்குனர் டி ஆர் பாலா 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள், 2 ஆல்பம் பண்ணியிருக்கிறார். 'ஒத்த தாமரை' பேரே கவிதையாய், பாடல் வரிகளில் நிறைய தமிழ் இருந்தது. நானும் இசைக்கலைஞராக இருப்பதால் அதை உணர்ந்தேன். புது டெக்னாலஜி மூலம் பல நாடுகளில் படப்பிடிப்பு நடந்த மாதிரி காட்சி அமைச்சிருக்காங்க.
ஆல்பங்களில் உங்களுக்கும் நடிகர் அஷ்வினுக்கும் போட்டி
ஒரு ஆரோக்கியமான போட்டி தான்... நானும் அஷ்வினும் பிரண்ட்ஷிப் ஆல்பம் பண்றோம். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் அதிக செலவில் எடுத்துருக்காங்க.
என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க
'மதில் மேல் காதல்' படம் ரிலீஸ் ஆகப்போகுது. 'சிவா மனசுல சக்தி' ராஜேஷ் இயக்கத்தில் நானும், ஹன்சிகாவும் வெப் சீரியஸ் நடிக்கிறோம்.
பிக்பாஸ்க்கு பின் உங்களுக்கான அங்கீகாரம்
என்மேல் எதிர்ப்பார்ப்பும், என்னால முடியும் என்ற நம்பிக்கை மலேசிய மக்களுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் இந்தியா வந்தேன், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மக்கள் அவங்க வீட்டு பிள்ளையாக நினைக்கிறாங்க. பட வாய்ப்புகளும் வருது.
நீங்க சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்கள்
விஜய், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், நிவின் பாலி, ராம் சரண் கூட நடிகனும். இவர்களை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன்
மக்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது
உங்க வீட்டில் இருக்கும் ஒருவனாக என்னை ஏற்று கொண்டதற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. நீங்கள் விரும்பும் சினிமாவை கொடுப்பேன்.