பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கேரள திரையுலகில் மாபெரும் புயலை கிளப்பியுள்ளது அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம். முன்னணி நடிகர்கள் பலரும் தலையில் துண்டை போட்டு ஓடி ஒளிந்து வருகிறார்கள். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அண்மையில் பிரபலமான நடிகை ஷாலின் சோயாவும் கேரள நடிகர் ஒருவருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை சிலர் செய்தியாக வெளியிட, அதை பார்த்து கடுப்பான ஷாலின் சோயா, 'ஒரு நியாயம் வேணாமா? என்ன நடந்தது தெரியுமா? அந்த வீடியோ பல வருடங்களுக்கு முன் ஷூட்டிங் இடைவேளையில் டிக் டாக் வீடியோவிற்காக செய்தது. அந்த பிரச்னைக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல. நீ ஒரு நியூஸ் சேனல் தானே? உனக்கு அறிவு இருக்கா?' என கடுமையாக சாடியிருக்கிறார். மேலும், ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறிய கமெண்ட்டில், 'இந்த கமெண்டுகளால் எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நான் எந்த தவறுமே செய்யவில்லை' என்றும் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.