விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழ் சின்னத்திரையில் கல்யாண பரிசு, பாவம் கணேசன் சீரியல்களின் முலம் பிரபலமானவர் நடிகை நேஹா கவுடா. இவர் சந்தன் கவுடா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தமிழ் சின்னத்திரையில் இவர் சீரியல் எதிலும் நடிக்காவிட்டாலும் இன்ஸ்டாகிராமில் தமிழ் ரசிகர்கள் நேஹா கவுடாவை பாலோ செய்து தான் வருகிறார்கள். அந்த வகையில் அவர் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் இனிப்பான செய்தியை இன்ஸ்டாகிராமில் வித்தியாசமாக தெரிவித்துள்ளார். குழந்தைக்காக பரிசோதனை செய்தபோது எடுத்த ஸ்கேன் புகைப்படங்களை கணவரை கட்டிப்பிடித்தப்படி காட்டி, அப்பா, அம்மா என்று எழுதப்பட்ட தொப்பிகளை இருவரும் அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் இதற்காக ஒரு ஷார்ட் வீடியோ ஒன்றையும் கிரியேட் செய்து பதிவிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் நேஹா கவுடாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.