தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான ராகவேந்திரன் புலி, தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். திரைத்துறையில் சாதிக்கும் வெறியோடு ஷார்ட் பிலிம், ஸ்கிரிப்ட் ரைட்டிங் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார். மேலும் ஜிம்மில் வொர்க் அவுட், நடன பயிற்சியுடன் தன்னை முழுவீச்சில் மெருகேற்றி வருகிறார். அந்த வகையில் திருமலை படத்தில் விஜய் லாரன்ஸ் மாஸ்டருடன் போட்டி போட்டு நடனமாடி சூப்பர் ஹிட் அடித்த 'தாம் தக்க தீம் தக்க' பாடலுக்கு, அது போலவே தன் நண்பருடன் சேர்ந்து வெறித்தனமாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, கனா காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் பாட்டு பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். தற்போது நடனத்திலும் தனது திறமையை காட்ட, ராகவேந்திரனுக்குள் இவ்வளவு திறமையா என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். விஜய்யுடன் அடுத்த படத்தில் கமிட்டானதற்காக வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் ராகவேந்திரன் புலி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.