அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

'கயல்' தொடர் மக்களுக்கு பேவரைட்டான சீரியலாக புகழ் பெற்றுள்ளது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கயல் தொடரை விட்டு நாயகன் சஞ்சீவ் கார்த்திக் விலகவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து சஞ்சீவிடமே பலரும் கேட்க, சஞ்சீவும் ஊடகத்தில் வெளியான அந்த செய்தியை தனது ஸ்டோரியில் பகிர்ந்து 'இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று ரசிகர்களிடமே கேள்வி கேட்டிருந்தார். இருப்பினும், சீரியலை விட்டு விலகுவது குறித்து எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. இதன்காரணமாக சஞ்சீவியின் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் காத்திருக்கின்றனர்.