'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாகுபலி படத்தின் மூலம் மற்ற மொழி நடிகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என உயர்ந்துவிட்டார் பிரபாஸ். தற்போது அவருடைய சம்பளம் 150 கோடி என்கிறது டோலிவுட் வட்டாரம்.
ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து மகாநடி இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ள ஸ்பிரிட் படத்தையும் அறிவித்துவிட்டார். இந்தப் படங்கள் இல்லாமல் மீண்டும் சலார் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தையும், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தையும் விரைவில் அறிவிக்க உள்ளாராம்.
இவற்றை எல்லாம் பிரபாஸ் முடித்துக் கொடுக்க 2021 ஆகிவிடும் என்கிறார்கள். முடித்த, நடிக்கும், அறிவித்த, அறிவிக்க உள்ள என 7 படங்கள் கைவசம் உள்ளது பிரபாஸுக்கு. ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் என்றால் அடுத்த நான்கு வருடங்களில் 1050 கோடி சம்பாதித்துவிடுவார்.