இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் |
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார் விக்னேஷ் சிவன். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாக சமீபத்தில் டிவிநிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மெளனம் கலைத்தார்.
தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், ரஜினியுடன் அண்ணாத்த, இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வரும் நயன்தாரா திருமணத்துக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள். இதனால் வெளி நிறுவன படங்களை தவிர்க்கும் அவர் சொந்த தயாரிப்பில் மட்டும் சில படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். லீட் ரோல்களில் மட்டும் நடிக்க இருக்கிறார்.