கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' |
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதிக்கு நயன்தாரா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கோணக் காதல் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது.
படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.