நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கியாரா அத்வானி. தெலுங்கில் ஏற்கனவே நடித்துள்ள இவர் இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படம் தமிழிழும் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 66வது படத்தை வம்சி இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில், இப்போது கியாரா அத்வானியிடமே வம்சி பேச்சுவார்த்தை நடத்தி, கிட்டத்தட்ட ஓகே செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதிக்கிறார் கியாரா. விஜய்யின் 66வது படம் தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் உருவாகிறது. இதனால் ஹிந்தி நடிகை ஒருவர் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பதால் இவரை தேர்வு செய்துள்ளாராம் வம்சி.