பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக இருந்து வரும் திவ்யதர்ஷினி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரையில் அதிகமாக தோன்றாமல் உள்ளார். இதற்கு காரணம் அவர் காலில் செய்து கொண்ட சர்ஜரி என சொல்லப்படுகிறது. காலில் சர்ஜரி செய்துள்ளதால் அவரால் அதிக நேரம் நிற்க முடியாது. இதன் காரணமாகவே டிடி டிவியில் விஜே அவதாரம் எடுக்காமல் உள்ளார். ஆனாலும் இவரது பேன் பாலோவர்ஸ் பத்தி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவரது போஸ்ட்டுகள் எப்போதுமே டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் டிடி அந்தமான் டூரின் போது நீச்சல் உடை அணிந்து கடற்கரை அருகே அமர்ந்திருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் பெண்களின் உடை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 'உடையில் எதுவும் இல்லை, பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. அந்தாமானில் கடலில் குளிக்க நான் நீச்சல் உடை அணிந்திருந்த போது, அங்கிருக்கும் ஒரு ஆணும் என்னை தவறாகவோ அல்லது இன்செக்யூராகவோ உணர வைக்கவில்லை' என கூறியுள்ளார்.