பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி வேலைகள் நடக்காத காரணத்தால் பட வெளியீடு தள்ளிப் போகிறது. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி பொங்கலுக்கு வெளிவந்தால் பல போட்டிகளுக்கு மத்தியில் தான் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவந்தாக வேண்டும், தெலுங்கிலேயே 2022 பொங்கலுக்கு “அகான்டா, ஆச்சார்யா, எப் 3, பீம்ல நாயக், சர்க்காரு வாரி பாட்டா, ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. தமிழில் 'வலிமை' படம் வெளிவர உள்ளது. அது போல கன்னடம், மலையாளம், ஹிந்தியிலும் அந்தந்த மொழிகளில் சில முக்கிய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இவ்வளவு போட்டிகளுடன் 'ஆர்ஆர்ஆர்' படத்தை வெளியிடுவது சரியா என இப்போதே கேள்வி எழ ஆரம்பித்துவிட்டது. இந்த போட்டியில் யார் தயங்கப் போவதில்லை, யார் பதுங்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.