ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சினிமா உலகைப் பொறுத்தவரை ஆண் வாரிசுகளைத்தான் பெரும்பாலும் நடிகர்களாக அறிமுகம் செய்வார்கள். ஆனால் சமீபகாலமாக அந்தநிலை மாறி பெண் வாரிசுகளையும் களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில் கமலின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன், அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் என பலர் தங்களது மகள்களை சினிமாவில் நடிகைகளாக களமிறக்கி உள்ளனர்.
டைரக்டர் ஷங்கரும் தனது மகள் அதிதியை, விருமன் படத்தில் அறிமுகம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பிரபல ஒளிப்பதிவாளரும், மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் என பல படங்களை இயக்கிய ராஜீவ்மேனனும் தனது மகள் சரஸ்வதியை தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக அறிமுகம் செய்கிறார். சரஸ்வதி இதற்கு முன்பு ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளம் மயம் என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.