மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவும், ஜோதிகா நடித்த வேடத்தில் அனுஷ்காவும் நடிப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா? என்று பி.வாசுவிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில நடிகைகளிடமும் பேசி வருகிறோம். அதனால் அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்கிறாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆக, சந்திரமுகி-2 படத்தில் அனுஷ்கா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.