'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட, ரசிகர்களிடம் அவருக்கு இருந்த கிரேஸ் இன்னும் குறையவில்லை. தனது காதல் கணவருடன் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய சமந்தா, சமீப நாட்களாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை உறுதிப்படுத்துவது போல சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் செயல்பாடுகளும் இருக்கின்றன. இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கூட சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. இந்த நிலையில் சமந்தா தன்னை குறித்து தேவையில்லாத வதந்திகளும் அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது கணவருடன் ஒருவேளை பிரிவு என்றாலும் கூட அதை நானே முறைப்படி அறிவிபேன் என்றும் இப்படி ஆளாளுக்கு விதவிதமாக செய்திகளை திரித்து எழுதுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க போவதாக சமந்தா தனது நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளதாகவும் தெரிகிறது