நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அருவம் படத்திற்கு பிறகு இந்தியன்-2, டக்கர், தெலுங்கில் மகா சமுத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இதில் தெலுங்கில் சர்வானந்துடன் இணைந்து அவர் நடித்துள்ள மகாசமுத்திரம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அக்டோபர்14-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன்பு மகாசமுத்திரம் படத்தின் டரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது சர்வானந்த் மட்டுமே கலந்து கொண்டார். சித்தார்த் கலந்து கொள்ளவில்லை
அதையடுத்து அப்படத்தின் இயக்குனரானஅஜய் பூபதி பேசும்போது, சித்தார்த் இந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் என்ன அறுவை சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. என்றாலும், மகாசமுத்திரம் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இதுகுறித்து சித்தார்த் தெரிவிப்பார் என்று அப்படக்குழு தெரிவித்துள்ளது.