அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாயல் கோஸ். தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு இங்கு வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்று அங்கு கவர்ச்சி நடிகையாக வளர்ந்தார். பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் சிலர் தன்னை தாக்க வந்ததாகவும், முகத்தில் ஆசிட் வீச முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
சில மர்ம நபர்கள் சிலர் என்னைப் பின் தொடர்ந்து வந்ததார்கள் அவர்கள் இரும்பு கம்பியால் என்னைத் தாக்க முயற்சித்ததுடன், என் மீது ஆசிட் வீச முயற்சித்தனர். நான் அதிஷ்டவசமாக காருக்குள் ஏறி தப்பினேன், ஆனாலும் எனது இடது கையில் அவர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள். நான் கூச்சல் எழுப்பியது யாருக்கும் கேட்கவில்லை.
அந்த கும்பலிடம் இருந்து நான் தப்பியது மிகப்பெரும் அதிர்ஷ்டம். என்னுடைய வாழ்வில் இதுநாள் வரையில் இதுபோன்ற ஒரு தாக்குதலை தான் சந்தித்தது இல்லை, இனி இதுபோன்ற ஒரு சம்பவத்தை சந்திக்கவே கூடாது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கிறேன் எதற்காக அவர்கள் என்னை தாக்க வந்தார்கள், இது யாருடைய திட்டம் என்று தனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட மத்திய அமைச்சார் ராம்தாஸ் அத்வாலே பாயல் கோஸ் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்று உறுதியும் அளித்திருக்கிறார்.