அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'தெறி'. இப்படத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடித்திருந்தார். படத்தில் அவரது குழந்தைத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதன்பிறகு நைனிகா 2018ல் வெளிவந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக நைனிகாவின் புகைப்படங்களை அவரது அம்மா மீனா அதிகமாக வெளியிடவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்பு மீனா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் தனது மகள் நைனிகாவுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மீனா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் நைனிகாவைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். நைனிகா நன்றாக வளர்ந்துள்ளார். ஊதா நிறப் புடவையில் மீனாவும், ஊதா நிற கவுனில் நைனிகாவும் இருக்கும் புகைப்படங்கள் அழகாக உள்ளன.
'தெறி பேபி' இப்படி வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.