நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் சிவகுமாரும், மறைந்த பாடலாசிரியர் புலமைபித்தனும் ஒரே ஊரில் பிறந்தவர்கள், ஒரே பள்ளியில் படித்தவர்கள். அவரைப்பற்றி நினைவலைகளை சிவகுமார் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5 ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் குடியிருந்த கோயில் படத்திற்கு, 'நான் யார் நான் யார் நீ யார்.. 'பாடல் எழுதி அதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இலக்கியத் தரமுள்ள பாடல்கள் எழுதுவதில் தனித்துவமாக விளங்கினார்.
என் படங்கள் பல, அவர் பாடல்களால் பெருமை பெற்றன. 'ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?, நீ அந்த வானம் நான் இந்த பூமி, ஒன்றென்று யார் சொல்லுவார். என்று 'சாமந்திப்பூ' படத்திற்கு பாடல் எழுதி கொடுத்தார். நாயகி சோபாவை நினைத்து படத்தில் நான் பாடிய பாடல். எனது 100 -வது படத்தின் உயிராக மக்கள் கொண்டாடிய பாடல் 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி, பச்சமல பக்கத்திலே மேயுதின்னு சொன்னாங்க..' 1979-ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடலாக தமிழக அரசு விருது பெற்றது. இளையராஜாவும், எஸ்.பி.பி யும் அவர் வரிகளுக்கு உயிர் கொடுத்தனர்.
எம்.ஜி.ஆர் அரசில் அரசவைக் கவிஞராகவும், மேல்சபைத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். திருமணத்திற்கு முன்னரே தன் புதல்வி தீ விபத்தில் அகால மரணமடைந்த போதும், தன் மகன் மோட்டார் விபத்தில் அகப்பட்டு கோமா நிலையில் 11மாதங்கள் இருந்து இறந்த போதும் கலங்காத நெஞ்சுரம் மிக்கவர்.
சமரசம் செய்து கொள்ளாத திராவிட சிந்தனையாளர், அவரது இழப்பு கலை இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரை தன்னுடைய 75வது வயதில் இழந்திருக்கும் அவரது துணைவியாருக்கும், மருமகளுக்கும், பேரன் திலீபனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.