ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். அதையடுத்து பிக்பாஸ்-4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும், டிவி சீரியலிலும் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது தோழி ஒருவரிடத்தில் டிவியில் நடிக்க சான்ஸ் வாங்கித்தர வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் ஷாட் செய்த ஒருவரைப் பற்றிய தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார் அனிதா சம்பத்.
அதோடு, கேஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் நிறைய பேர் சோசியல் மீடியாவில் பெண்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார்கள். அதனால் இதுபோன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அனிதா சம்பத்.