பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
குஷ்பு, ஜோதிகா இவர்கள் வரிசையில் கொஞ்சம் பூசினாற் போல் உடல் அமைப்பைக் கொண்ட நடிகைதான் மஞ்சிமா மோகன். இவர் தமிழ் சினிமாவிற்கு சிம்புவுடன் ஜோடி சேர்ந்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். அதன் பின் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த மஞ்சிமா மோகன், அதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, ‛நடிகைகளும் மனிதர்கள் தான். சாதாரண மனிதர்கள் சந்திக்கும் உடல்-மன ரீதியான பிரச்னைகள் எல்லாம் நாங்களும் சந்திக்கிறோம். ஆனால், எங்களை கிண்டல் செய்பவர்களுக்கு யதார்த்தம் புரிய மாட்டேங்குது. எனக்கு 2019-ம் ஆண்டில் காலில் ஒரு சர்ஜரி நடந்தது. அதற்குப் பிறகு எனக்கு கடுமையான முதுகுவலி, ட்ரீட்மென்ட் என்று நான் அலைந்து கொண்டிருந்தேன். அதில் எனக்கு கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது. இதனால் பல பேர் என்னை வைத்து சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வந்தார்கள். இது எனக்கு பெரிய மன அழுத்தத்தை கொடுத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நான் அதை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டேன்.
நடிகைகள் என்றால் குண்டாக இருக்க கூடாதா? கொஞ்சம் உடம்பு குறைந்தால் போதும் என்ன உடல் நிலை சரியில்லையா? என்றும் கொஞ்சம் வெயிட் போட்டால் ஏன் இவ்வளவு கொஞ்சம் ஆகிவிட்டீர்கள் என்றும் பல கேள்விகளை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதெல்லாம் பாதிக்கக்கூடாது என்பதற்காக நான் என்னை சமாதானம் செய்து கொண்டேன். அதற்க்காக நான் இப்படித்தான் இருப்பேன் என்று சொல்ல வரவில்லை. எந்த படத்திற்கு எப்படி இருக்க வேண்டுமோ அந்த படத்திற்கு ஏற்ற மாதிரி உடல் பருமனை மாற்றிக் கொள்வது ஒன்றும் தவறில்லை. இப்போது நான் வெயிட் லாஸ் முயற்சிகளை தீவிரமாக செய்துவருகிறேன். இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறினார்.