துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்பட அனைத்து முன்வரிசை ஹீரோக்களுடனும் காமெடியனாக நடித்து விட்டவர் சூரி. தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இதனால் அடுத்து சந்தானம் பாணியில் சூரியும் முழுநேர ஹீரோவாகி விடுவாரோ என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் அனைவருமே சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, அவரோ தனது தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார். அதையடுத்து அண்ணனும், தம்பியும் ஒரேநாளில் பிறந்தார்களா? என்ற ஆச்சர்ய கேள்விகள் எழுந்தபோது, நானும் எனது தம்பி லட்சுமணனும் இரட்டை பிறவிகள் என்பதை சோசியல் மீடியாவில் தெரிவித்தார் சூரி.
அதையடுத்து டுவிட்டரில், சூரியை வாழ்த்திய சிவகார்த்திகேயன், அண்ணன் ஹீரோவாகி விட்டார். இனிமேல் நம்ம சங்கத்துக்கு வேற ஆளதான் பார்க்கனும் போல என்று கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சூரி, அப்படியெல்லாம் விட்ற முடியாதுங்க தலைவரே, சர்க்கஸ்னா சிங்கம் இருக்கனும். சங்கம்னா செயலாளர் இருக்கனும். ரொம்ப நன்றிங்க தம்பி, லவ் யூ தம்பி என்று சிவகார்த்திகேயனுக்கு பதில் கொடுத்துள்ளார் சூரி.