பஹல்காம் தாக்குதல்: நடிகர் அஜித் கண்டனம் | அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன் | நிறைவுக்கு வரும் 'குட் பேட் அக்லி' ஓட்டம் | அக்டோபரில் 'பாகுபலி' ரீரிலீஸ் | 3000 தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ | விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | ஓடிடியில் தொடர் வரவேற்பில் டிராகன் | தொடரும் - அடுத்த 100 கோடி நோக்கி மோகன்லால் | சிறுநீர் குடித்தேன் - பரேஷ் ராவல் கருத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு | பத்மபூஷன் விருது : அஜித்துக்கு இதுவரை வெளிப்படையாக வாழ்த்து சொல்லாத விஜய் |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் ரோஜா. ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். நகரி தொகுதியில் இருந்து அவர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வரும் நடிகை ரோஜா, அவ்வப்போது தனது சொந்த தொகுதியான நகரி தொகுதியில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நகரி தொகுதியில் உள்ள பறை இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
அப்போது பறை இசைக் கலைஞர்களின் இசையை அவர் சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நடிகை ரோஜா ஒரு கட்டத்தில் திடீரென்று எழுந்து அவரே பறை இசையை இசைக்க தொடங்கினார். இசைக் கலைஞர்களுடன் நடிகை ரோஜா பறையிசை இசைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு இதேபோல் ரோஜா மாணவர்களுடன் கபடி விளையாடிய வீடியோ வைரலானது.