ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் |
விக்ரமும், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங் பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக துருவ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 55வது நிமிடத்தில் அது கடல் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் அதிர்வு உண்டானது.
இதனால் பயணிகள் அனைவரும் பயந்தனர். விமானம் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன்பிறகு மறுநாள் இன்னொரு விமானத்தில் படக் குழுவினர் டார்ஜிலிங் சென்று சேர்ந்தனர்.