பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

அனுபமா பரமேஸ்வரனையும் காதல் கிசுகிசுகளையும் பிரிக்க முடியாது. எல்லா கிசுகிசுக்களுக்கும் தற்போது முற்ற்றுப்புள்ளி வைத்துள்ளார். 'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் 'கொடி' திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.
அதன்பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் 'தள்ளிப் போகாதே' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். திரைப்படங்களில் தற்போது பிசியாகிவிட்ட அனுபமா குறித்த திருமண வதந்திகள் அவ்வவ்போது தலைப்பு செய்திகளாகி விடுகின்றன.
அதிலும் பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரன் திருமணம் என்ற செய்தி தொடர்ந்து இணையத்தில் பரவியது. பும்ரா - அனுபமா காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் என்ற அளவுக்கு தக்வல் பரவியது. ஆனால் அனுபமா பரமேஸ்வரன் குடும்பத்தின் தரப்பில் இது வதந்தி என முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீவிரமாக இருக்கும் அனுபமா, ரசிகர்களிடம் சமீபத்தில் உரையாடியபோது, நிஜ வாழ்க்கையில் காதலித்தது உண்டா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அனுபமா, ஆம், நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன். ஆனால் அந்த காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை. காதல் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டோம் என்றார்.
மேலும் மன நிம்மதிக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, சமீபத்தில்தான் ஓவியம் வரைய தொடங்கியிருக்கிறேன், அதில் கவனம் செலுத்துவது மிகவும் நன்றாக இருக்கிறது. அமைதி என்பது நமக்குள் இருந்து வரவேண்டும் என்றார். தெலுங்கில் பிரபலமாகி வரும் நடிகர் ராம் பொத்னேனி பற்றிய என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நல்ல நண்பர் என்றார். உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்றதற்கு, அம்மா சமைக்கும் உணவுகள் பிடிக்கும். கேரளா உணவு வகைகள் அனைத்தும் பிடிக்கும். பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன் என்று கூறினார்.