பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

இந்தியன்-2, ஆச்சார்யா, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகும் புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் பாலிவுட்டில் தயாராகி வரும் உமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். அடுத்தபடியாக ரவுடி பேபி என்றொரு படத்திலும் நடிக்கிறார். ராஜா சரவணன் என்பவர் இயக்கும் இந்தபடத்தில் சத்யராஜ், லட்சுமிராய், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ரவுடி பேபியான அந்த சிறுமியையும், காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருக்கிறதாம். அந்தவகையில், இமைக்கா நொடிகளில் நயன்தாரா, பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷா ஆகியோர் சிறுமிக்கு அம்மாவாக நடித்தது போன்று இந்த படத்தில் காஜல் அகர்வாலும் நடிக்கப்போகிறார்.