மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் | தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! - ஜோதிகா வெளியிட்ட தகவல் |
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை விஜய்யை வைத்து இயக்கினார். அடுத்து ஹிந்தியில் ஷாரூக் கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். வேகமாக வளர்ந்தாலும் பழைய படங்களின் கதைக்களங்களை வைத்தே படங்களை இயக்கி வருகிறார் என்ற விமர்சனங்கள் அவர் மீது உண்டு.
தற்போது அட்லீயை வெறுப்பவர்களுக்கு அவரது மனைவியும் நடிகையுமான பிரியா அட்லீ பதிலளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார் பிரியா அட்லீ. அப்போது ரசிகர் ஒருவர், "அட்லி வெறுப்பாளர்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீங்கள் சொல்ல விரும்புவது எது?” என்ற கேள்வியை கேட்டார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக ப்ரியா அட்லீ, "எங்கள் மீது இன்னும் அதிகமாக அன்பு செலுத்துவதற்கு நன்றி. அன்பைப் பரப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.