அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் |

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தற்போது நடிகை அனுஷ்கா இந்த கடினமான சூழ்நிலையில் மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது, 'தயவு செய்து அனைவரையும் அன்பு செய்யுங்கள். நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுங்கள். அது எவ்வளவாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அதிகமாக அன்பு செலுத்துங்கள். அதிகமாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களைத் தேடி மற்றவர்களை வரச் செய்யுங்கள்.
இந்த உலகத்தில் நல்லவைகளும் இருக்கின்றன என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். கொஞ்சம் கடினமாகவும் இருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி பயப்பட தேவை இல்லை. நீங்கள் இதுவரை கடந்து வந்த கஷ்டங்களில் இருந்து புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். மேலும் புதிதாக ஆரம்பங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் நண்பர்களின் முகத்தில் முத்தமிடுங்கள். அவர்களை கட்டி அணைத்து நொறுங்கிப் போன இதயங்களை ஒன்று சேருங்கள். சத்தமாக அன்பு செய்யுங்கள். அதிகமாக நம்புங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள்.
உங்களுக்கு நீங்களே நண்பனாக இருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் தருணங்களில் தொடர்பில் இருங்கள். உங்கள் கைகளை குலுக்கச் செய்யும் விஷயங்களுடனும் இணைந்திருங்கள். நீங்கள் இப்போது உயிரோடு இருப்பதற்கு இவ்வளவு அதிர்ஷ்டம் செய்தீர்கள் என்பதற்கு காரணமான ஒவ்வொரு விஷயங்களையும் ஆராதியுங்கள். அழகான விஷயங்கள் ஒவ்வொரு நாளும் மறைந்து கொண்டிருக்கின்றன. அவர்களில் ஒன்றாக உங்கள் இதயத்தை இருக்க விடாதீர்கள்" என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அனுஷ்காவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.




