நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமா, சின்னத்திரை தொடர்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அமர சிகாமணி(74). கவிஞராகவும் அறியப்பட்ட இவருக்கு திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று(ஜூன் 21) அதிகாலை உயிரிழந்தார். தனது தந்தை மறைந்தது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அவரது மகன் பார்த்திபன் சிகாமணி. இவரது மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு சியாமளா தேவி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.